2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அவற்றில் 2 கிரகணங்கள் இந்தியாவில் தெரியும்

 




2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அவற்றில் 2 கிரகணங்கள் இந்தியாவில் தெரியும் என தகவல் வெளியாகி உள்ளது.

2021-ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். தலா ஒரு பூரண சூரிய கிரகணமும், பூரண சந்திர கிரகணமும் ஏற்படும்.  மே மாதம் 26-ம் தேதி சந்திரகிரகணம் நிகழும். 

இது மேற்கு வங்காளம், கடலோர ஒடிசா மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் தெரியும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருகிற போது பூரண சந்திரகிரகணம் ஏற்படுகிறது.

ஜூன் மாதம் 10-ம் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் நிகழும். அப்போது சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும். இது 94.3 சதவீதம் சூரியனை மூடி, நெருப்பு வளையமாக காணப்படும். ஆனால் இந்தியாவில் இதை பார்க்க முடியாது. 2021, நவம்பர் 19-ம் தேதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படும்.

இதை அருணாசல பிரதேசம் மற்றும் அசாமின் சில பகுதிகளில் குறுகிய நேரத்துக்கு பார்க்க முடியும். 2021, டிசம்பர் 4-ம் தேதி பூரண சூரிய கிரகணம் ஏற்படும். சந்திரனின் 97.9 சதவீதம், பூமியின் நிழலால் மூடப்பட்டிருக்கும். இந்த பூரண சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.