ஜனவரி 1 முதல் பாட்டில் குடிநீரில் வருகிறது மாற்றம்

 



ஜனவரி 1 முதல் பாட்டில் குடிநீரில் வருகிறது மாற்றம்

பாட்டில் குடிநீருக்கான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அதன் சுவையும் மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI பாட்டில் குடிநீருக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தண்ணீர் சுத்திகரிப்பு என்ற பெயரில் அதில் உள்ள தாதுக்கள் நீக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, பாட்டில் குடிநீரில் சில தாதுக்களை கலப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திற்கு அறிவுறுத்தியது.

மேலும் குடிநீரில் நீக்கப்படும் தாதுக்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது. 

இந்த உத்தரவு 2019ஆம் ஆண்டிலேயே பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இரண்டு முறை அவகாசம் கொடுத்து டிசம்பர் 2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

பாட்டில் குடிநீர் தாயரிக்கும் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில், 20 மில்லிகிராம் கால்சியம் மற்றும் 10 மில்லிகிராம் மெக்னீசியம் கட்டாயம் சேர்க்க வேண்டும் என புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

புதிய விதிப்படி, தண்ணீர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.