ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உறுப்புகள் சேதமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஹ்மத் பட்டேல் இன்று அதிகாலை காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவருமாகிய அஹ்மத் பட்டேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்பதாகவே சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதிகுருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோனா வைரஸின் தொற்றால் உடலின் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அஹ்மத் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மற்ற அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அஹ்மத் பட்டேல் ஜி அவர்களின் மறைவு வருத்தமளிப்பதாகவும், கூர்மையான மனமுடைய அவர் சமூகத்திற்கு சேவை செய்தவர்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் அவரது பங்கு எப்பொழுதும் நினைவில் இருக்கும். அவரது மகன் பைசலிடம் பேசி இரங்கல் தெரிவித்தேன், அஹ்மத் பாயின் ஆத்துமா சாந்தியடையட்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,