தமிழகத்தில் கொரோனாவிலிருந்து நலம்


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 26.11.2020 1,464 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.


இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,76,174 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 219 ஆய்வகங்கள் (அரசு-67 மற்றும் தனியார்-152) மூலமாக, இன்று மட்டும் 60,964 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 18 லட்சத்து 2 ஆயிரத்து 567 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


26.11.2020 கொரோனா உறுதியானவர்களில், 884 பேர் ஆண்கள், 580 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,68,909 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,07,231 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது.


26.11.2020 மட்டும் 1,797 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 53 ஆயிரத்து 332 ஆக உள்ளது.

26.11.2020 மட்டும் கொரோனா பாதித்த 14 பேர் உயிரிழந்தனர். அதில், 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.


இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 11,669 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 11,173 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.