தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

 



நிவர் புயல் கடலூருக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவில் உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும். (25.11.2020) இன்று இரவு அல்லது நாளை (26.11.2020) அதிகாலையில் தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என அறிவிப்பு


* சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை


சென்னை அடையாறில், தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை


* செம்பரம்பாக்கம் ஏரி நண்பகல் திறக்கப்பட உள்ளதாக தகவல்


* செம்பரம்பாக்கம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை