லட்சுமி விலாஸ் வங்கியின் நிதி நிலைமை கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியான இழப்புகளைச் சந்தித்து அதன் நிகர மதிப்பைக் குறைத்து வருவதால் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், மத்திய அரசு லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதன்படி 17.11.2020 முதல் 16.12.2020 வரை அதன் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்கவோ, பரிமாற்றம் மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.