செய்திகள் - தமிழ்நாடு


கடம்பத்தூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103 பிறந்தநாள் விழா  மணவாளநகரில் மாவட்ட துணைத் தலைவர் ஏகாட்டூர் ஆனந்தன் தலைமையில் கொண்டாப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளரும், வட்டார பொறுப்பாளருமான எம்.கே.மணவாளன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். வக்கீல்கள் கே.ஜி.புருஷோத்தமன் இ.கே.ரமேஷ் ஆகியோர் இனிப்பு வழங்கினார். இதில் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஆர்.சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


____________________________


தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தொழிலதிபர் வைகுண்டராஜன் அளித்த புகாரில் 12 பேர் மீது நெல்லை மாநகர காவல்துறை கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சித்ததாக நேற்று வைகுண்டராஜன் புகார் அளித்திருந்தார்.


______________________________


 


சென்னை அடுத்த குன்றத்தூரில் லாரி மோதி 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் லாரியை முந்திசெல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் 8-ம் வகுப்பு மாணவன் அனஸ் ஹாஜா(13) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற மேலும் 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


____________________________________


விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது பாஜகவை சேர்ந்த காயத்ரி என்பவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைமை பாலியல் புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என காயத்ரி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி வழங்குவதாக கூறி கலிவரதன் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டியுள்ளனர். புகாரளித்த காயத்ரி விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிர் அணி பொதுச்செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.