மேலும் செய்திகள்


தமிழகத்தில் நேற்று 65,053 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 58 ஆயிரத்து 191  ஆக உயர்ந்துள்ளது. நேற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில அளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,478 ஆக உயர்ந்துள்ளது.


______________________________


கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்மம்பள்ளி அணையில் இருந்து நீர் தீர்ப்பால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


_________________________________


மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறந்த நிலையில் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் சிறப்பு பூஜையுடன் வழிபட்டபின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


_______________________


வாலாஜாபாத் அருகே மழை காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். தாம்பரம் சாய் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் குடும்பத்தினர் 2 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்தனர்.


________________________


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மேலும் 4 மணிநேரம் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியிலும் கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. 


_________________________


கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,720 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஒரே நாளில் 145 மில்லியன் கனஅடி அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.70 அடி; 21 அடியை எட்டியவுடன் உபரி நீர் திறந்து விடப்படும்.


____________________________