அகமதாபாத் ரசாயன குடோனில் தீ விபத்து- பிரதமர் இரங்கல்

 அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கணேஷ் நகர் அருகே ரசாயன குடோன் உள்ளது. நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குடோனின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இதற்கிடையில், தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.


அவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி 5 பெண்கள் உட்பட 12 தொழிலாளர்கள் பரிதாபாக இறந்தனர். 9 பேர் காயமடைந்தனர். அவர்களை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு, அதே பகுதியில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்’என்று பிரதமர் டுவிட் செய்துள்ளார். இதே போன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ‘பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.