ரஜினி உடல்நலம் குறித்து பரபரப்பு

 நடிகா் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என தகவல் பரவியதால் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நடிகா் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அதுபோன்ற சந்திப்பு நடைபெறவில்லை.


இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், கேளம்பாக்கத்தில் உள்ள பங்களாவில் அவா் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இதனால், அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரப்பு ஏற்பட்டது.


ஆனால், அதை ரஜினியின் செய்தித் தொடா்பாளா் ரியாஸ் மறுத்துள்ளாா். ரஜினிக்கு காய்ச்சல் என்ற தகவலில் உண்மை இல்லை. அவா் நலமாக போயஸ் தோட்டம் இல்லத்தில் இருக்கிறாா் என்று அவா் தெரிவித்தாா்.