6 தொகுதிகள் காலி தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை

 தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  அனைத்து கட்சிகளோடு தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார். 


இந்திய தேர்தல் ஆணையம் நவ.,16ந்தேதிக்குள் தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட  உத்தரவிட்டது இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் திருத்தம்,பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் போன்றவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதுடன் மற்றும்  சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.


இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதியில் இருந்து டிச.,15ந்தேதிக்குள்ளான காலக்கட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜன.,5ந்தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு ஜன.,20ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துவது வழக்கம். வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் பற்றி ஆலோசனைகளை அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்கும்.

 

இந்நிலையில் அவ்வாறு அங்கீகரிக்கட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று  காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், இரட்டை பெயர் பதிவுகள் நீக்கம், வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையில் தமிழகத்தில் 6 தொகுதிகள் காலியாக உள்ளதால் இது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.