டிசம்பருக்குள் 100 மில்லியன் டோஸ்..சீரம் நிறுவனம் அறிவிப்பு

 


அடுத்த மாத இறுதிக்குள் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் 10 கோடி கொரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க  பல்வேறு நாடுகள் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.


இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனிகா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. 


இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பு மருந்து  இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், மருந்து நல்ல பலன் தருவதாகவும்  சீரம் நிறுவனத் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.


மேலும், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவில்  100 மில்லியன் டோஸை விநியோகிக்க நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சீரம் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.


தடுப்பூசி வைரஸிலிருந்து பயனுள்ள பாதுகாப்பை வழங்குகிறது என்று இறுதி கட்ட சோதனை தரவு காட்டினால், அரசாங்கத்திடமிருந்து அவசர அங்கீகாரத்தைப் பெறக்கூடும் என்று என்று தெரிவித்தார்.