அமாவாசையை முன்னிட்டு வீரராகவ பெருமாள் கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து


திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று]. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னைக்கு அருகில் திருவள்ளூரில் இக்கோயில்அமைந்துள்ளது.


இத்திருக்கோயில் திருக்குளம் நோய்தீர்க்கும் திருக்குளமாகவும், பெருமாள் வைத்திய வீரராகவப்பெருமாளாகவும் பக்தர்களால் கூறப்படுகின்றனர். 


இத்திருக்குள்த்தை பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அணைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதமாக கருதப்படுகிறது. 


திருவள்ளூர், ஸ்ரீ வைத்திய வீரராகவ கோயில் தேவஸ்தானத்தின் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத் வெளியிடப்பட்டுள்ளஅறிக்கை:


கொரோனா தொற்றுக்காரணமாக அரசாங்க பரிந்துரைப்படி, திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் சார்பாகஅமாவாசையை முன்னிட்டு இன்று (15 தேதி) மதியம் 12 மணி முதல் நாளை 16 இரவு வரை பக்தர்கள் தரிசனம் கிடையாது.


எனவே பக்தர்கள் யாரும் வருகை தர வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.