காரை ஓட்ட கொடுக்காததால் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்

  


சென்னை சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்தவர் டொமினிக். இவரது மகனான டார்வின் கடந்த 2 வருடங்களுக்கு முன்பதாக ஹூண்டாய் ஐ 20 காரை வாங்கியுள்ளார்.


டோமினிக் மனைவியின் தம்பி மகனான ஜர்வீஸ், இந்த காரை பார்த்ததும் அதில் ஏற விரும்பியதாக கூறப்படுகிறது.


ஆனால் டார்வின் ஜர்வீஸை காரில் ஏறவும் ஓட்டவும் அனுமதி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கார் கண்ணாடியை அப்போதே அடித்து உடைத்துள்ளார் ஜர்வீஸ்.


இதனையடுத்து, இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஜர்வீஸ், டார்வினின் கார் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் ஜர்வீஸை கைது செய்தனர்.