இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா


இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே தான் செல்கிறது.



உலகளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. தினமும் ஒரு லட்சம் பேர் ஏறக்குறைய கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

 

ஒரு லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே ஏற்படுகிறது.

 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 46,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 594 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதுவரை இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்றால் 7,594,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 115,236 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

6,730,61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 748,883 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

விரைவில் இந்நிலையும் மாறி கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் மக்கள் முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளி பின்பற்றுவதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.