கேட்ச்களில் சதம் அடித்து எம்எஸ் அசத்தல் சாதனை


ஜபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்


பஞ்சாப் அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில் கே.எல் ராகுலின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் தோனி இச்சாதனையை தன் வசப்படுத்தினார்.


கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 186 போட்டிகளில் 103 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.


தோனி 195 போட்டிகளில் 100 கேட்ச் பிடித்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கூண்டோடு அதிக வீரர்களை அவுட் செய்து களத்திலிருந்து வெளியேற்றிய விக்கெட் கீப்பர் பட்டியலில் 139 விக்கெட்டுகளுடன் தல தோனியே முதலிடத்தில் இருந்து வருகிறார்.