மூச்சுக்குழாயில் சிக்கிய கல் - அகற்றிய அரசு மருத்துவமனை

 




குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கல் அறுவைச் சிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவமனை



கோவை, அக். 21 - இரண்டு வயது குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய கல்லை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றியது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.


திருப்பூர் மாவட்டம், மாதப்பூரைச் சேர்ந்தவர் முனி யாண்டி (கூலித்தொழிலாளி). இவரது 2 வயது மகன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறிய கல்லொன்று மூக்கில் சிக்கியுள்ளது.


இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் சிர மப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  


அங்கு, குழந்தையை பரிசோதித்தில் மூச்சுக்குழாயில் கல் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுவாசக் குழாய் நுண்ணோக்கி பிராங்காஸ்கோபி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமலேயே கல்லை வெளியே எடுத்தனர்.


அரசு மருத்துவர்களின் இச்சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.