சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்


பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் மேலும் ஐந்து மார்க்கங்களில் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது என்றும் அறிவிப்பு.

 

கயா முதல் சென்னை எழும்பூர் வரை  (வண்டி எண்: 02389) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 25-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் கயா ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும்.


மறுமார்க்கமாக எழும்பூர்-கயா (02390) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27-ந்தேதி மற்றும் நவம்பர் மாதம் 3, 10, 17, 24-ந்தேதி, டிசம்பர் மாதம் 1-ந்தேதிகளில் காலை 7 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் என்றும்,


இந்த சிறப்பு ரயில்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலை 8 மணியில் இருந்து கவுண்ட்டர்கள் மற்றும் ‘ஆன்-லைனில்’ செய்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.