இன்றைய ராசிபலன் 28-10-2020

 மேஷம் ராசி: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை உண்டாக்கும். வர்த்தகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் ஈடேறும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


ரிஷபம் ராசி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பெரியவர்களிடமும், மற்றவர்களிடமும் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும்.


மிதுனம் ராசி: உங்கள் செயலில் வேகம் கூடும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.


கடகம் ராசி: உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிகம் மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சிறு சிறு விஷயங்களிலும் கவனத்துடன் செயல்படுவதன் மூலம் மனக்கசப்புகளை தவிர்க்க இயலும்.


சிம்மம் ராசி: சந்திராஷ்டமம் இருப்பதால் சில சமயங்களில் விரக்தியாக பேசுவீர்கள்.உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.


கன்னி ராசி:கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.புதிய வீடு மற்றும் மனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.


துலாம் ராசி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு வாதங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் அமையும். நெருக்கமானவர்களுக்காக சில செயல்களை செய்து முடித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.


விருச்சகம் ராசி: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வீடு மற்றும் மனை தொடர்பான செயல்பாடுகளில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 


தனுசு ராசி:  புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றி உண்டாகும். பயணங்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். மனதில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் மனநிறைவும், காரியசித்தியும் ஏற்படும்.


மகரம் ராசி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்பதன் மூலம் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு கிடைக்கும். கவனக்குறைவினால் சில அவப்பெயர்கள் ஏற்படும்.


கும்பம் ராசி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்று கொள்வார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது சற்று சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.


மீனம் ராசி:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தைத் தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.  கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். மனதில் எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமாக கிடைக்கும்.