இன்றைய (07/10/2020) ராசி பலன்கள்


மேஷம்:  இன்று உங்கள் பேச்சில் பதட்டமும் வேதனையும் இருக்கும். பிரார்த்தனை நல்ல பலனைத்தரும்.உறவினர் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
 பணியாளர்களைத் தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

 

ரிஷபம்: இன்றைய நாளில் மோசமான சூழ்நிலை காணப்படும். அதை சமாளிக்க போதுமான தைரியம் இழந்து காணப்படுவீர்கள்.உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். பணப்புழக்கம் உண்டு.
மனைவியின் பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிடைக்கும் நாள்.
குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பயம் நீங்கும்.

 


மிதுனம் : இன்று வளர்ச்சிக்கு சாதகமான நாளாக இருக்க வாய்ப்பில்லை. ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும்.நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும். உறவினர்களின் தொல்லை குறையும். கனவு நனவாகும்
 திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் தவறுகளைத் தவிர்ப்பீர்கள்.

 

கடகம்:  இன்றைய நாள் நீங்கள்விரைந்து முடிவெடுப்பதற்கு சாதகமாக அமையும். இலட்சியத்தில் நீங்கள்வெற்றி காண்பீர்கள்.மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறும் சாதனை செய்வீர்கள்.எந்த விஷயத்தையும் சகஜமாக எடுத்துக் கொள்வீர்கள்.நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

 

சிம்மம்: இன்று அழுத்தமான சூழ்நிலைகளும் வெற்றிக்கு குறைந்த வாய்ப்புகளும் காணப்படுகின்றன.மனைவியுடன் அன்பை வலுப்படுத்துவீர்கள். சந்தோஷச் செய்தி வரும். உற்சாகமான போக்கு காரணமாக மனதில் மகிழ்ச்சி நிலவும். சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

 

கன்னி: இன்று சஞ்சலம் ஆக காணப்படுவீர்கள். தினசரி செயல்களை மேற்கொள்வதும் கூட இன்று கடினமாக இருக்கும். மனதில் நேற்றிருந்த கவலைகள் அகலும் நாள்.பணியில் உங்களுக்குத் திருப்தியான உணர்வு ஏற்படும்.குழந்தைகளுக்கான முயற்சி தடையின்றி நடைபெறும்

 


துலாம்:  இன்று யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படக் கூடாது. எதிர்பார்த்த தகவல் ஒன்று வந்து சேரும்.எதிரிகளின் பலவீனத்தை அறிந்து செயல்பட்டு வெல்வீர்கள்.பிள்ளைகளின் செல்வாக்கு உயர்வதால் பெருமிதம் ஏற்படும்.

 

விருச்சிகம்: உறுதியுடன், தைரியத்துடன் செயல்பட்டு இன்று செயல்களில் வெற்றி காணப்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானங்களுக்காக குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பயணத்தின் போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கடமையில் இருந்த தொய்வு அகலும். நிதி நிலை நிம்மதி தரும்.

 

தனுசு: இன்று முக்கியமான விஷயங்களை நிறைவேற்றுவதற்கு உகந்த நாள். ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் அமைதி கிடைக்கும். வாழ்க்கைத் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். நேர்மையான அணுகுமுறை காரணமாக பிரச்னை வராது.

 

மகரம்: இன்று வெற்றி அடைவதற்கு நீங்கள் கடினமான முயற்சியுடன் போராட வேண்டும்.தெய்வீக சிந்தனை மேலோங்குவதால் நிம்மதி கூடும்.
தேவைகளை அடைவதற்கு அதிக பணம் செலவழிப்பீர்கள்.
பணியாளர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்

 

கும்பம்: இன்று உங்கள் நலன்களை ஊக்குவிக்கும் விஷயங்களில் முடிவெடுக்க உகந்த நாள். இன்று நீங்கள் நிறைவான திருப்தியுடன் காணப்படுவீர்கள்.வெளியுலகத் தொடர்பு நீங்கள் விரும்பும் ஆதாயத்தை தரும். மனதில் மகிழ்ச்சி காரணமாக மன்னிக்கும் குணம் உருவாகும்.
பிள்ளைகளுக்கு குடும்பச்சுமை கூடும். உபரி வருமானம் வரும்.

 

மீனம்:  இன்று முன்னேற்றமான பலன்கள் காணப்படும். உங்களுடைய உறுதியான முயற்சியினால் நீங்கள் மேற்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.சக பணியாளரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.
சொத்துகளால் லாபம் உண்டு. பணி பற்றிய நற்செய்தி வரும்.
புதிய பாதை தெரிவதால் மனபலம் பெருகும்.