அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்

 பொறியியல் இறுதியாண்டு தேர்வில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி தேர்வு நடைபெறும்.


கடந்த 2008 முதல் இறுதியாண்டில் அரியர் வைத்துள்ளவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ல் செய்முறை தேர்வும் 24ல-ஆம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.