கனத்த இதயத்துடன்-இன்று உடல் நல்லடக்கம்

 எஸ்.பி.பி.,யின் உடல் இன்று  தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


மறைந்த பின்னணி பாடகர் ,நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக்கொண்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பூவுலகமே மெய்மறக்க வைக்கும் குரல் இன்று மவுனமாகி தன் பயணத்தை பூவுலகில் முடித்து விண்ணுலகம் சென்றது.


இந்நிலையில் அவரது உடல், நேற்று மாலை  நுங்கம்பாக்கம் இல்லத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


ரசிகர்களின் கண்ணீர் தான் மழையாக கொட்டியதோ? என்று எண்ணத் தோன்றும் வகையில் இடியும்,மின்னலுமாக ரசிகர்களின் குழுறலாக இடி இடித்தது போல; மறைந்த காந்தக்குரலுக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திரையுலகினர், ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டு, இசை மழை வழங்கியவருக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில் எஸ்.பி.பி.,யின் உடல், 25.09.2020 இரவு, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள, அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.


26.09.2020 காலை, 11:௦௦ மணிக்கு, பண்ணை வீட்டின் ஒரு பகுதியில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


எல்லோருடைய இதயங்களையும் இதமாக வருடியவர் இன்று இதயத்துடிப்பு நின்றவராக காட்சி தருகிறார்.


அவர் என்று நம்மோடு இசையாக என்றுமே பயணிப்பார் என்பதில் ஐயமில்லை


உண்மை   செய்திகள்  சார்பாக  காந்தக்குரலுக்கு கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறது.


உங்களோடு சேர்ந்து  குழுவின் சார்பாக  கண்ணீர் அஞ்சலி.