பாமக அரசியல் கணக்கு


தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பாமக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த விதமான அரசியல் நகர்வை மேற்கொள்ளும் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


தேர்தல்களில் அதிமுக, திமுக என மாறி மாறி பாமக பயணிக்கத் தொடங்கினாலும், பாமகவின் வாக்கு வங்கி பெரிய அளவில் சேதாரம் ஆகவில்லை. 


வட மாவட்டங்களில் பாமக இன்றி எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்ற கருத்துருவாக்கம் தமிழக அரசியலில் உருவானது.


அரசியல் களத்தில் அதிமுகவும், திமுகவும் மாற்றி மாற்றி பாமகவுக்கு எதிராக வியூகம் அமைத்துச் செயல்படுவதால் 10 ஆண்டுகளாகவே பாமக தேர்தல் களத்தில் பின்னடைவைச் சந்திக்கிறது.


பலமுனை போட்டி உருவாகி எதிர்ப்பு வாக்குகள் சிதறினால் மட்டுமே பாமகவுக்கு வெற்றி என்பதை 1996, 2014 தேர்தல்கள் உணர்த்துகின்றன.


தமிழக அரசியலில் இப்போது ஆளுமைகள் இல்லாத சூழலில், தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் சுழற்சியைக் கணித்து, வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த வழியில் பாமக பயணிக்கப் போகிறது என்பது சில மாதங்களில் தெரியவரும்.