விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது


தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை முதல்வர் பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார்.


தமிழகத்தில் தக்கல் முறையில் 5,000 விவசாய மின் இணைப்புகள் 6 மாத காலத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.