சுஷாந்த் மரணம்-தீபிகா படுகோனிடம் விசாரணை


நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது  போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. 


இந்த விசாரணையில் நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்  அனுப்பியது.


அவரிடம் 4 மணி நேரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, 26.09.2020  நடிகை தீபிகா படுகோன்  விசாரணைக்காக மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.


 அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இன்று ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரும் ஆஜர் ஆனார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.