இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டினர் சுட்டு கொலை

 இந்தியாவில் ராஜஸ்தான் வழியாக நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டினர் இருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எல்லை பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் எனும் மாவட்டத்தில் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.


மேலும் இவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெளியிடப்படாத ஹெராசின் ஆகியவற்றை மீட்டுள்ளனர். நாட்டுக்குள் நுழைய முயன்ற நபர்களை பாதுகாப்பு படையினர் கொலை செய்ததால் அவர்கள் இந்தியாவுக்குள் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் தப்பிக்க முயன்ற போதும் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்ததாகவும் கூறப்படுகிறது.