எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

 பாமக நிறுவனர் ராமதாஸ் 29.09.2020  வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்பிபிஎஸ் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் அதிகாரம் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாலும், அந்த இடங்களை யாரைக் கொண்டு வேண்டுமானாலும் நிரப்பலாம் என்பதாலும் அவை பிற மாநில மாணவர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன.


எனவே, தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை எவ்வாறு முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றனவோ, அதேபோல், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் உள்ளூர் மாணவர்களைக் கொண்டே நிரப்பும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.


அதேபோல், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் தமிழக அரசு நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலமாகவே மேற்கொள்ளும் வகையில் விதிகளை திருத்த வேண்டும்.


இதன்மூலம்  தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் அதிக இடம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.