சென்னையில் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சேவை

 சென்னையில் 2-வது கட்டமாக பரங்கி மலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரலுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.


கரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக முடங்கி இருந்த சென்னை மெட்ரோ ரயில்சேவை கடந்த 7-ம் தேதி மீண்டும் தொடங்கியது.


விமான நிலையம்- வண்ணாரப்பேட்டை இடையேயான முதல் வழித்தடத்தில் மட்டும் அன்று போக்குவரத்து தொடங்கியது.


இந்நிலையில்,சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாகபரங்கி மலை செல்லும் மெட்ரோ ரயில் சேவையும் 09/09/2020 காலை தொடங்கியது.


இந்த வழித்தடத்திலும் காலை 7 முதல் இரவு 8 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன.


காலை 8.30 முதல் 10.30 மணி மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளி யில் ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.


‘மெட்ரோ ரயில் பயணிகளுக்கு 100 சதவீத பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்வேறு முன் னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 


கரோனா அச்சம் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. வரும் நாட்களில் இது படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.