டேவிட் ஆட்டன்பரோவுக்கு அமைதி விருது


டெல்லியில் 07.09.2020று காணொலி காட்சி மூலமாக  இந்திரா காந்தி அமைதி விருது வழங்கும் விழா  நடைபெற்றது.இந்த விழாவில் பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரும் ,சமூக  ஆர்வலருமான  டேவிட் ஆட்டன்பரோவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில்  காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பேசினார்.அவர் பேசுகையில், டேவிட் ஆட்டன்பரோ சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு இயற்கை குறித்து உணர்த்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


குறிப்பாக இயற்கை குறித்த தகவல்களை, திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் வாயிலாக மக்களுக்கு நன்கு உணர்த்தியவர்.


சுற்றுச்சூழலுக்கு எதிரான  நடவடிக்கைகள் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்தும் டேவிட்  இந்த விருதுக்கு தகுதியானவராக உள்ளார்.


இந்திரா காந்தி இந்தியாவின் பல்வகை உயிரினங்களை பாதுகாப்பதை  கட்டமைத்து வைத்தார் என்றும் பேசினார்.