விதிகளை மீறுவோருக்கு அபராதம் - தமிழக அரசு

 தமிழக்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.


மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.


இதுபோன்று தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். தொழிற்துறை இடங்கள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வில்லை என்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.


கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறையை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் பொது சுகாதார சட்டத் திருத்தத்தின் கீழ் அபராத விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.