கழிப்பறையிலும் ஆக்சிஜன் வசதி

 



கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு திடீர் என்று உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது அதிகரித்து வருகிறது. அதிலும் பலருக்கு அதிகாலை நேரங்களில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. ஹைபாக்சியா எனப்படும் இந்த பாதிப்பு காரணமாக பலர் இறப்பதும் வழக்கமாகி வருகிறது.


கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ளது. மிதமான மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகள் கழிப்பறைக்கு செல்லும் போது மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.


இதை தடுக்கும் வகையில் உள்ளேயே ஆக்சிஜன் குழாய்கள் வைக்கப்பட்டு உள்ளது. கழிப்பறை வாசலிலும், உள்ளேயும் குழாய் பொருத்தப்பட்டு இந்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.


கழிவறையில் ஆக்சிஜன் குறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டது அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இவர்களின் இந்த முடிவு மக்கள் இடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது