12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

 




மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.


ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.


மிதுனம்: எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.


கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.




சிம்மம்: மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.


கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.


துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பதற்றம், மனச்சோர்வு ஏற்படக் கூடும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது.


விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.




தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.


மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.


கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள்


மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.