12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

 




 


மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். பணவரவுகள் அதிகரிப்பதால் புதிய உற்சாகம் பிறக்கும். குழந்தைகள்பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.


ரிஷபம்: இன்று சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாது இருப்பது நல்லது. தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள். முயன்றால் வெற்றி நிச்சியம்.சகோதரர் வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். வாகனம் செலவு வைக்கும்.


மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.ஆரோக்கியம் மேம்படும். படுக்கை சுகங்கள், நல்ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். வருமானம் சேரும் வளம் மிக்க நாள்.


கடகம்: இன்று கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முயலவும்.சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்தி தரும்.




சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிறருக்கு உதவி புரிவதில் பேரின்பம் அடைவீர்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.


கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.புதிய உத்தியோகமும், உத்வேகமும் ஏற்படும் நாள். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.


துலாம்: அடிமனதில் இந்துவந்த போராட்டம் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். இன்று, தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.


விருச்சிகம்: இன்று, அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பயன் பெறலாம். மனைவியின் கலகத்தால் உறவுகளிடையே உரசல்கள் ஏற்படலாம். பொருள்களை கவனமாகப் பாதுகாத்தால் இழப்பைத் தவிரக்கலாம்.மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள்.




தனுசு: திடீர் யோகம் உண்டாகும். புதிய தொழில் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.


மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வாகன வசதி பெருகும்.அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.


கும்பம்: கோபம், பதற்றம் குறையும். இழுபறியாக இருந்துவந்த அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். உங்கள் திறமையை முழுமையாகக் காட்டிச் செயல்பட்டாலும் மேலிடத்தில் திருப்தி இருக்காது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் தேவையற்ற விபத்துக்களைத் தவிர்க்கலாம்.


மீனம்:  வீட்டில் திருட்டைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பணயிழப்புகள் ஏற்படலாம்.முயற்சிகள் வெற்றியடையும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் விசேஷங்களுக்கு நன்கொடை வழங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.









  மோகனா  செல்வராஜ்