கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன் காரணமாக கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்.


காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனையில்  ஆளுநருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.


மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்   தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில்  கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.