மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை


கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கடந்த 3 மூன்று மாதங்களாக மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. 


இந்த ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், இருந்து மீண்டுவர ரிசர்வ் வங்கி சமீபத்தில் தீர்வு திட்டத்தை வெளியிட்டு இருந்தது.


இந்த தீர்வு திட்டத்தை அமல்படுத்துவதால் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் குறித்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 3-ம்  தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.