சிவ அடையாளங்கள் - சடாமுடி

சிவ அடையாளங்கள்


சடாமுடி



சடாமுடி அல்லது பிரிசடை ( Dreadlocks, மேலும் locs, dreads) ( சமசுகிருதம்: Jaṭā,) என்பது கயிறு அல்லது பிரி போன்ற படர்பின்னல் அல்லது பின்னப்பட்ட முடி ஆகும். 


சடாமுடியின் பழங்கால சித்தரிப்புகளானது 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது


சடாமுடியின் ஆரம்பகால சித்தரிப்புகளில் சில 3600 ஆண்டுகளுக்கு முந்தியதானதும், ஐரோப்பாவின் ஆரம்பகால நாகரிகங்களில் ஒன்றான மினோவான் நாகரிக காலத்தில் காணப்படுகிறது. இந்த நாகரிகமானது இது கிரீட்டை மையமாகக் கொண்டது (இப்போது இது கிரேக்கத்தின் ஒரு பகுதி).


ஈஜியன் தீவான தேராவில் (நவீன சாண்டோரினி, கிரீஸ்) கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில் நீண்ட சடாமுடி முடி கொண்ட நபர்களை சித்தரிக்கப்படுகின்றன. 


பண்டைய எகிப்தில், பின்னப்பட்ட சடாமுடி மற்றும் பொய் முடி அணிந்த எகிப்தியர்களைக் காட்டும் புடைப்புச் சிற்பங்கள், சிலைகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் காணப்படுகின்றன. 


பின்னப்பட்ட சடாமுடியுடன் பூட்டிய பொய் முடிகளுடன் கூடிய பண்டைய எகிப்தியர்களின் மம்மிகளை தொல்லியலாளர்கள் எடுத்துள்ளனர். 


மேலும் வெண்கலக் காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களேச் சேர்ந்த அண்மைக் கிழக்கு, அனத்தோலியா, காக்கேசியா, கிழக்கு நடுநிலம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சுமேரியா, ஈலாம், பண்டைய எகிப்து, பண்டைக் கிரேக்கம், அக்காடியப் பேரரசு, அசிரியா, பபிலோனியா, இட்டைட்டு பேரரசு, அமோரிட்டு, மித்தானி இராச்சியம், அத்தாயன், ஜுரியத், அரமேயர்கள், எப்லா, இஸ்ரேலியர்கள், பிரிகியர்களின், லிடியன்ஸ்சே, பெர்சியர்கள், மீடியார்கள், பார்தியர்கள், சலேடியர், ஆர்மேனியர்கள், ஜார்ஜியன்கள், அசீரியர், சிலிசியா மற்றும் கானானியர் / ஃபொனீஷியன்ஸ் / கார்தாஜினிசீயர்கள் போன்ற பல பண்டைய பல மக்களினத்தவர்கள் சடாமுடி, தாடி ஆகியவற்றுடன் கொண்டதாக அவர்களின் கலை வேலைப்பாடுகள் சித்திரிக்கின்றன


இந்து வேத வரிகளானது சடாமுடி குறித்த தொன்மையான சான்றுகளை வழங்குகின்றன. இந்தியாவில் சாதுக்கள் அல்லது துறவிகள் சடாமுடி கொண்டவர்களாக உள்ளனர்.


குறிப்பாக சிவபெருமானை முதன்மையாக வழிபடும் சந்நியாசிகள் தங்களது சடாமுடியை தலை உச்சியில் முடிந்தவர்களாக இருப்பர். இவர்கள் முடியப்பட்ட இந்த சடாமுடிகளை சிறப்பு நாட்களிலில் அல்லது சடங்குகளின்போது மட்டுமே அவிழ்த்து கீழே விடுகின்றனர்.


இந்தியவில் இந்துக்களில் இருபாலினரும் சடாமுடியை புனிதமானதாகக் கருதுகின்றனர். இது துறவிகளிடையே ஒரு சமய வழக்கமாக பின்பற்றப்படுகிறது.


மேலும் இது பகட்டை புறக்கணிப்பதன் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. சைவ ஆதீன கர்தர்கள் குறிப்பாக தரும்புர ஆதீன கர்த்தர்கள் சடாமுடியை பராமரிப்பது குறித்து உ. வே. சாமிநாதையர் குறிப்பிடும்போது, சடையுள்ளவர்கள் எண்ணைத் தேய்த்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.


அதற்கு பதில் மிளகு முதலிய சிறு பொருட்களை பால்விட்டு அரைத்து தேய்த்து தலையை உலர்த்துவர் இதற்குப் பெயர் மிளகு காப்பு என்பதாகும் என்கிறார்


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி. 


அன்புடன் பிரியா