எம்.பி வசந்தக்குமார் உருவ படத்திற்கு திமுக தலைவர் மலர்தூவி மரியாதை

 



கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்த்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சையால் கொரோனாவில் இருந்து மீண்ட அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் கடந்த 28 ஆம் தேதி காலமானார்.


இவரது மறைவு பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதன்பின் பிரதமர் முதல் பல அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.


சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்.பி வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


இவருடன் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி  மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதையை செலுத்தினர் என்பது குறிப்பிடப்படுகிறது.