திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி


இந்த 4ம் கட்ட  ஊரடங்கில் பலவேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதனிடையே, கிட்டத்தட்ட 6 மாத காலமாக சினிமா படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனால், சினிமாவை நம்பி இருக்கும் கலைஞர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்க கூறி அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.


தற்போது வெளியிட்டுள்ள 4 ம் கட்ட ஊரடங்கு தளர்வில், திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


மேலும், திரையரங்குகள் திறக்க அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.