ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. பின்னர் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு செய்தது.
இதைத்தொடர்ந்து, வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது .தமிழக அரசின் மனுவில், "ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனு தாக்கல் செய்தால், தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.