முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம்.: மருத்துவமனை தகவல்

 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அம்மாநில முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். 


மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் எக்ரா தொகுதி எம்எல்ஏ. சம்ரேஷ் தாஸ் (74) , கடந்த மாதம் 18ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதியன்று அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், சால்ட் லேக் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உடவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.