5 வயது சிறுமி 13.5 நிமிடங்களில் 111 அம்புகளை தெறிக்கவிட்டுள்ளார்.


சென்னையைச் சேர்ந்த சஞ்சனா என்ற 5 வயது சிறுமி 13.5 நிமிடங்களில் 111 அம்புகளை தெறிக்கவிட்டுள்ளார்.


இதுல என்னப்பா ஆச்சரியம் இருக்கிறது என்று கேட்பது புரிகிறது. அவர் அம்புகளை பறக்கவிட்டது தலைகீழாக தொங்கி கொண்டு என்பதுதான் இதன் ஸ்வாரஸ்யமே. நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.


இந்த சாதனை மூலம் Human Ultimate World Recordsல் இவரது பெயர் பதியப்பட்டுள்ளது. இவருக்கு தமிழகத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த சாதனையை இவர் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னையில் நிகழ்த்தினார்.

இவருக்கு பயிற்சி அளித்த ஷிஹன் ஹூசைனி கூறுகையில், ''தலைகீழாக தொங்கிக் கொண்டு 13.5 நிமிடங்களில் 111 அம்புகளை எய்துள்ளார். இது உலக சாதனை.


இதுவரை யாருமே இது மாதிரியான சாதனையை நிகழ்த்தவில்லை. கின்னஸ் உலக சாதனைக்கும் இவரது சாதனையை அனுப்ப முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.