நாளை முதல் சென்னையில் களைகட்டும் டாஸ்மாக் திறப்பு விழா.

சாமியானா பந்தல், மைக் செட்டுடன் நாளை முதல் சென்னையில் களைகட்டும் டாஸ்மாக் திறப்பு விழா.சென்னையில் நாளை மதுக்கடைகளை திறக்கும் நிலையில் 14 வழிகாட்டும் நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன.


இந்த நிலையில் மத்திய அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க சில தளர்வுகளை அளித்தவுடன் கடந்த ஜூன் மாதம் முதல் சென்னையை தவிர்த்து தமிழகத்திலும் கடைகள் திறக்கப்பட்டன.


அதே நேரத்தில் சென்னையிலிருந்து மற்ற மாவட்ட எல்லைகளுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருவோரின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் டாஸ்மாக்கை திறக்க அவசரம் காட்டுவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்நிலையத்திற்குள்பட்ட மதுபான கடைகள் நாளை முதல் திறக்கப்படவுள்ளன.


மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு ஆகியவை சென்னை மண்டலத்திற்குள்பட்டவையாகும்.

சாமியானா பந்தல், மைக் செட்டு அமைக்கப்பட வேண்டும். டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.


அவ்வப்போது தேங்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். மால்கள், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்பன உள்ளிட்ட 14 வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.