மேஷம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள் சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் காரியங்களிலிருந்த இழுபறி நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். எடுத்த காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். சகோதரரிடம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: எளிதில் முடிந்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாக போய் முடியும். சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.
கன்னி: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். அரசு விவகாரங்களில் கவனம் தேவை. மருத்துவச் செலவு ஏற்படலாம்.
துலாம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும்.உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர் களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள்.
விருச்சிகம்: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
தனுசு: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள்.சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்கு உள்ளாவீர்கள்
மகரம்: எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். முக்கிய கோப்புகளை கவனமுடன் கையாளுங்கள்.கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள்
கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி கிடைக்கும்.பணப்புழக்கம் அதிகரிக் கும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுகொள்வார்கள்.
மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். முகப்பொலிவு கூடும். அதிகாரப் பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
மோகனா செல்வராஜ்
அன்பு வாசகர்களே இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம். |