ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விவகாரம் - சபாநாயகர் விசாரணை

 தமிழகத்தில் பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.ஆனால் பிரிந்து சென்ற சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தது.


11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.


இந்த விவகாரம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் திமுக கொறடா சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


இந்நிலையில் 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் இன்று விசாரணை மேற்கொள்கிறார். காணொலி காட்சி மூலமாக 11 எம்எல்ஏக்களிடம்  இன்று விசாரணை மேற்கொள்கிறார் சபாநாயகர் தனபால்.