செப்டம்பர்1முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி


தமிழகத்திலும் சில தளர்வுகள் அறிவித்து வரும் நிலையில், தற்போது நூலகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது.


மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு அனுமதி இல்லை எனவும், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நூலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வாசகர்கள் கேட்கும் புத்தகங்களை நூலக பணியாளர்கள் தான் எடுத்துக் கொடுக்கவேண்டும். நூலகர்கள் மற்றும் நூலக பணியாளர்கள் முகக்கவசம் கையுறை அணிவது அவசியம் என்று சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.