தமிழ் திரையுலகின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், தீவிர சிகிக்சைபிரிவில் உள்ள பாடகர் எஸ்பிபிக்கு உயிர் காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.