பெங்களூரு-முழு ஊரடங்கு

 பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


பெங்களூரு நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 10 நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்து கர்நாடகா அரசு உத்தரட்டுள்ளது. நாளை முழு ஊரடங்கு உள்ள நிலையில் 13-ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4,277 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


வெளிநாடுகளில் இருந்து வந்த 561 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 406 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 3310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழகத்தில் இன்று வெளியிட்ட உயிரிழந்தோர் பட்டியலில் உள்ள 69 பேரில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே இறந்தனர்.சிறை தண்டனை பெற்றவர்களுக்கு பரோல் அளிப்பது குறித்த சிறை விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. 2-3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றோருக்கான சிறைவிதிகளில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை  கடந்தது.  மும்பை தாராவியில் இன்று புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் ஸ்வப்னா. தங்கக் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்திருந்தது.


இந்நிலையில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை துப்பாக்கியால் சுட்டதாக அமமுன நிர்வாகி போலீசில் புகார் அளித்திருந்தார். இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி மீது அமமுக நிர்வாகி தாண்டவமூர்த்தி அளித்த புகாரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.


திருப்போரூர் காவல் நிலையத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி நாகராஜன், எஸ்.பி கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.