செய்திகள்


இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர அனைவருக்கும் கல்லூரி பருவத்தேர்வுகள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு


அரசு அறிவிப்பின் மூலம் முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கும், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மூன்றாம் ஆண்டு படிப்பிற்கும் செல்லலாம். மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளை எழுத வேண்டும். பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகள் படிப்பவர்கள் ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வு எழுத தேவையில்லை. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கடைசி செமஸ்டர் தேர்வுகளை எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில் தமிழ்நாடு பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது


மதிப்பெண் பட்டியல் விநியோகம்:


தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு நாளை முதல் ஜூலை 30ஆம் தேதி வரை மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 


தமிழகத்தில் 70 சதவீத மானியத்துடன், சூரிய சக்தி பம்புசெட்கள் திட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


 


ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.