அதிமுக- தி.மு.க, - எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று


பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எம்எல்ஏ கோவிந்தராஜ் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உட்பட 18 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ராஜபாளையம், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா தொற்று, உறுதியாகியுள்ளது.எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியானது.அவர் மதுரை தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதற்கிடையில், கிருஷ்ணகிரி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்குட்டுவன், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள், 15 பேருக்கு நேற்று ‍கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.சென்னை ஆளுநர் மாளிகையில் 76 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 76 சி.ஆர்.பி.எப். வீரர்களும் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


கொரோனா பாதித்த 76 பேரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.