கொரோனா நோயாளி - தற்கொலை


சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் 37 வயது கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். செம்மஞ்சேரியைச் சேர்ந்த கொரோனா நோயாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் உரியிழந்தவரின் குடும்பத்தினரை சுகதத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.


நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 7 லட்சத்தை நெருங்கியது.


நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 24,248 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தொடா்ந்து நான்காவது நாளாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ கடந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,97,413-ஆக அதிகரித்தது.


வேலூர் மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர கிராம நிர்வாக அலுவலருக்கு கரோனா தொற்று உறுதியனதால், வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டது.பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63,, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.91-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.